இலங்கையில் புகையிரதங்களில் நிரம்பி வழியும் பயணிகள்
கடந்த சில நாட்களாக புகையிரதங்களில் பயணிகள் நிரம்பி வழியத் தொடங்கியுள்ளதாக புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் (போக்குவரத்து) காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் வழக்கத்தை விட நூற்றுக்கு ஐம்பது வீதம் எண்ணிக்கையான பயணிகள் புகையிரதங்களில் பயணிக்கத் தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதன் காரணமாக இன்றைய தினம் சில புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க நேர்ந்ததாகவும், நாளைய தினமும் இன்னும் சில புகையிரதங்களில் மேலதிக பெட்டிகளை இணைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தூரப்பிரதேச ரயில் நிலைய பயணச்சீட்டுக்கு தட்டுப்பாடு
தற்போதைய நிலையில் தூரப்பிரதேச ரயில் நிலையங்களில் பயணச்சீட்டுகள் முடிவடைந்து வருவதன் காரணமாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் இன்றைய தினம் பெலியத்த புகையிரத நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரஜரட்ட ரெஜிண புகையிரதம் பெலியத்தையில் இருந்து புறப்படும் போதே பயணிகளால் நிரம்பி விட்டது.
அதன் காரணமாக மாத்தறை ரயில் நிலையத்தில் ஏராளம் பயணிகள் ரயிலில் ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.





உங்கள் குடும்பத்தை பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா? உங்களுக்கு சில முக்கிய தகவல்கள் News Lankasri
