சமிக்ஞைகளை மீறி செல்வதனால் பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றன - கிளிநொச்சி தொடருந்து நிலைய அதிபர்
தொடருந்து சமிக்ஞைகளை மீறி செல்வதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட தொடருந்து நிலைய அதிபர் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று (24.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 5 மாதங்களின் பின்னர் தொடருந்து சேவை மீண்டும் வழமைபோல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து சமிக்கை
இந்த நிலையில் தற்பொழுது கடவையில் தொடருந்து வருவதற்கான சமிக்ஞை காட்டப்பட்ட நிலையிலும், மக்கள் அதனை பொருட்படுத்தாது சமிக்ஞையை மீறி செல்கின்றனர்.
இதன் காரணமாகவே பல உயிர்கள் காவுகொள்ளப்படுகின்றது.
எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் செயல்ப்பட வேண்டும் எனவும், வீதி சமிக்கைகளை மதித்து தொடருந்து செல்லும் வரை சில நிமிடங்கள் தாமதித்து செல்வதன் மூலம் உயிர்சேதம், பொருட்சேதம் என்பவற்றை தவிர்த்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri
