புன்னைச்சோலை - பத்திரகாளி அம்மன் ஆலய தீ மிதிப்பில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள்
கிழக்கிலங்கையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் தீமிதிப்பு நேற்று (12) மிகச் சிறப்பான முறையில் பக்திப் பெருக்குடன் நடைபெற்ற இந்த தீ மிதிப்பு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 07) கதவு திறத்தலுடன் பக்திபூர்வமாக ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சம் தொடர்ந்து இடம்பெற்று வந்ததுடன் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை தீ மிதிப்பு மாலையில் விசேட பூஜை வழிபாட்டுடன் ஆரம்பமாகியது.
இந்த தீ மிதிப்பு நேர்த்திக்கடனை முடிப்பதற்காக மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இருந்து ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் என பல்லாயிக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து தீ மிதித்து நிறைவேற்றினர்.
இந்த தீ மிதிப்பில் சுமார் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அதேவேளை, குடிநீர் மற்றும் அன்னதானம் ஏனைய வசதிகள் அனைத்தும் ஆலய நிர்வாக சபையினரால் சிறப்புற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.




பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan