ஒரே ஆண்டில் 3 இலட்சத்துக்கும் அதிகமானோர் கைது! அரசாங்கம் வெளியிட்ட அதிரடித் தகவல்
அரசாங்கத்தின் நாடு தழுவிய "நாடொன்றுபட்டு" விசேட நடவடிக்கையின் கீழ் கடந்த ஒரு வருடத்தில் 300,000-க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2025 ஒக்டோபர் 30 முதல் 2026 ஒக்டோபர் 18ஆம் திகதி வரையான காலப்பகுதியிலேயே இந்தக் கைதுகள் இடம்பெற்றுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் கைது
நேற்று(20) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் வெளியிட்ட தகவல்களின்படி, ஒரு வருடத்தில் மொத்தம் 300,218 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் 2,500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. 2026ஆம் ஆண்டில் மாத்திரம் 987 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அதேநேரம், 97,074 சோதனைகளில் 2,485 கிலோகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
18,710 சோதனைகளில் 3,302.07 கிலோகிராம் ஐஸ் (Crystal Methamphetamine) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
தீவிர நடவடிக்கை
65,765 சோதனைகளில் 11,146 கிலோகிராம் கஞ்சாவும் 16.7 மில்லியன் கஞ்சா செடிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
261 சோதனைகளில் 297.1 கிலோகிராம் கொக்கெய்ன் மீட்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, 1,723 கிலோகிராம் குஷ், 416 கிலோகிராம் ஹஷிஷ் மற்றும் 4.5 மில்லியன் போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சட்டவிரோத சொத்துக் குவிப்பு தொடர்பில் 449 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 3,749 சந்தேகநபர்களுக்கு எதிராகத் தடுப்புக்காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளன.
அத்துடன், போதைப்பொருளுக்கு அடிமையான 2,580 பேர் புனர்வாழ்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் வர்த்தகம், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் சட்டவிரோத ஆயுதங்களுக்கு எதிரான இந்தத் தீவிர நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
you may like this..
ஈழப் போராட்டத்தில் யோதலிங்கம் கிளர்ச்சியின் குறியீடு 12 மணி நேரம் முன்
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் மரணமடைந்ததாக வெளியான தகவல்: அரசு வெளியிட்ட புகைப்படங்கள் News Lankasri
அமெரிக்கா மீண்டும் தாக்கினால்., இந்த 9 நாடுகளின் மீது தாக்குதல் நடத்தப்படும்: ஈரான் எச்சரிக்கை News Lankasri