ராஜபக்சவின் நெருங்கிய உறவினருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு ஊழல் குற்றச்சாட்டின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் பிரதிவாதிகள் தரப்பு வழக்கறிஞர்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த பின்னர் கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
மூன்று தனிப்பட்ட பிணை
சந்தேக நபரை ரூ.50,000 ரொக்கப் பிணையிலும், தலா ரூ.05 மில்லியன் மதிப்புள்ள மூன்று தனிப்பட்ட பிணைகளிலும் செல்ல நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிஷாந்த விக்ரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 1 மணி நேரம் முன்

புதிய சீரியலில் நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ள பிக்பாஸ் புகழ் வினுஷா... எந்த டிவி தொடர் தெரியுமா? Cineulagam

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri
