எங்களுடைய தேசம் விடுதலையடைய நாம் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும் : பிரபல தமிழ் தொழிலதிபர்
எங்களுடைய தேசம் விடுதலையடைய வேண்டுமாக இருந்தால் பொருளாதாரத்தில் நாங்கள் முன்னகர்ந்து செல்லும் செல்ல வேண்டும். அப்போது தான் எங்களது சமுகத்தின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என பிரபல தமிழ் புலம்பெயர் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தினை அவர் நேற்று (25.08.2024) வவுனியா (Vavuniya) பல்கலைக்கழகத்தில் உலக தொழில் முனைவோர் தினம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று இந்த தாயகத்திலுள்ள ஏராளமான பிரச்சினைகளில் தொழில் வாய்ப்பின்மையானது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு இருக்கக் கூடிய ஏராளமான இளைஞர்கள் மற்றும் யுவதிகள் பாதை மாறி செல்வதற்கு நாட்டில் தொழில் இன்மை என்பதே முக்கியமான காரணமாகும்.
தற்கால இளைஞர்கள் இன்றைய அரசியலையும், ஜனாதிபதியையும் நிர்ணய்க்கின்ற சக்திகளாக எதிர்காலத்தில் மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |