எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழ நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்: நீதி அமைச்சர்
நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்ட நிலையில் எமது எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம சேவகர் பிரிவுகளில் அமைக்கப்பட்டுள்ள சகவாழ்வு சங்கங்களுக்கு மாவட்ட மட்ட ஆலோசகர் சபை அமைக்கும் நிகழ்வும், அவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வும் நேற்று (25) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
40 வருட யுத்தம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த நாட்டைக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுவிப்பதற்காகத் தமிழர், சிங்களவர், பறங்கியர், முஸ்லிம்கள், மலேயர்கள் உட்பட அனைவரும் ஒன்றிணைந்து 1948 ஆம் ஆண்டில் சுதந்திரத்தைப் பெற்ற போதும் 1972ஆம் ஆண்டு அரசமைப்பை மாற்றி பூரண சுதந்திரத்தைப் பெற்றோம்.
இந்த ஒற்றுமையை அரசியல்வாதிகள் பிரித்து நாசமாக்கி அரசியல் செய்தார்கள். இதனால் நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அரசியல் குழப்பம் காரணமாக மிகவும் துன்பகரமான காலத்தில் இருந்திருக்கின்றோம். இந்த நாட்டிலே நாங்கள் பிறந்தது அதிஷ்டமாக இருந்தபோதும் கடந்த 40 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இந்த நாட்டில் நாங்கள் பிறந்தது துரதிஷ்டமானது என நினைத்தோம்.
அரசியல்வாதிகளின் தவறு
கடந்த காலங்களில் நாங்கள் கிராமங்களை அழித்தோம், குண்டு வைத்தோம், எரித்தோம் என்று வன்முறைகளில் ஈடுபட்டோம்.
அப்படியான ஒரு நாட்டில்தான் இவ்வளவு காலமாக வாழ்ந்து வருகின்றோம். அரசியல்வாதிகள் செய்த பெரும் தவறால் இந்த நாட்டில் சமாதானம் இல்லாம் போய்விட்டது ஜனநாயகம் என்பது நாட்டில் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதைத்தான் குறிப்பிடுகின்றது.
இருந்தபோதும் ஜனநாயகத்துக்கு எதிராக அரசியல் தலைவர்கள் சிலர் செயற்படுகின்றனர். நாங்கள் இந்த நாட்டை அழித்து நாட்டைப் பயன்படுத்தாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
எனவே, நாட்டில் எல்லோரும் ஒன்றிணைந்து எதிர்காலச் சந்ததிகளாவது நிம்மதியாக வாழக்கூடிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
