எமது இருப்பு இல்லாமல்போகும் நிலைமை ஏற்படும்!யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் (PHOTOS)
சமூகம் மாற்றமடைய வேண்டும்,நாங்கள் தொடர்ந்து இவ்வாறு சென்றால் எமது இருப்பே இல்லாமல்போகும் நிலைமையேற்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்ர்க்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்,மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டனர்.
சிறப்பு அதிதியாக கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் மேலதிக செயலாளர் இரா.நெடுஞ்செழியன்,கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் டாக்டர் எஸ்.சிவச்செல்வன்,மட்டக்களப்பு தேசிய சேமிப்பு வங்கியின் முன்னாள் முகாமையாளர் வி.சுவேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.









