எமது நாடு மிக மோசமானதொரு மௌன வன்முறைக்கு முகம் கொடுத்து நிற்கிறது - டக்ளஸ்
எமது நாடு மிக மோசமானதொரு மௌன வன்முறைக்கு முகம் கொடுத்து நிற்கிறது. மௌனமாகவே வருகிற நோய் மவுனமாகவே போகின்ற மக்கள், ஒருவருடைய உடலைத் தூக்கிச் செல்வதற்குக் கூட யாரும் முன்வரமுடியாத ஒரு அபாக்கியமான சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது என டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
சாண் ஏற முழம் சறுக்கும் என்பார்கள். எமது நாட்டிலும் இவ்வாறான நிலையே காணப்படுகிறது. நாட்டில் கோவிட் தொற்றானது நாளாந்தம் 200க்கு மேற்பட்ட மரணங்களை 3000ஐ தாண்டிய எண்ணிக்கையிலான தொற்றாளர்களையும் கண்டுகொண்டிருக்கிறது.
எமது நாடு கடந்த காலங்களில் ஆயுதம் ஏந்திய வன்முறைகளுக்கு முகங்கொடுத்துள்ளது. இன்று எமது நாடு மிக மோசமானதொரு மௌன வன்முறைக்கு முகம் கொடுத்து நிற்கிறது.
மௌனமாகவே வருகிற நோய் மவுனமாகவே போகின்ற மக்கள், ஒருவருடைய உடலைத் தூக்கிச் செல்வதற்குக் கூட யாரும் முன்வரமுடியாத ஒரு அபாக்கியமான சூழ்நிலை உருவாக்கி இருக்கிறது.
இத்தகைய மிகை அனர்த்த நிலைமையினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு என நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் கோரி வருகின்றனர்.
மறுபக்கத்தில் நாட்டை முடக்கி வைப்பதன் மூலம் பொருளாதார நீதியாக பாரிய பின்னடைவினை நாடு எதிர்கொள்ளுகிறது எனப் பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.