நாடளாவிய ரீதியில் நடைபெற்ற தேர்த்திருவிழாக்கள்(Video)
முல்லைத்தீவு மாவட்டத்தின் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ தேர்த்திருவிழா சிறப்புற நிறைவேறியது.
ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 18.06.2023 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி வேட்டைத்திருவிழா, சப்பரதிருவிழா என 15 நாட்கள் உற்சவங்கள் சிறப்புற இடம்பெற்றுள்ளது.
இதற்கமைய 15 ஆவது நாளான நேற்று (02.07.2023) தேர்த்திருவிழா சிறப்புற நடைபெற்றுள்ளது.
நண்பகல் 12.00 மணியளவில் கொடிக்கம்ப அபிசேகங்கள் இடம்பெற்று தொடர்ந்து வசந்தமண்டப பூசை இடம்பெற்று வசந்த மண்டபத்தில் வீற்றிருந்த பூலோகநாயகி சமேத வேகாவனேஸ்வரர், வள்ளிதெய்வானை உடன் முருகப்பெருமான், பிள்ளையார் ஆகியோர் எழுந்தருளி உள்வீதி வலம் வந்து மாலை 3.00 மணியளவில் தேரில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலித்தனர்.

பெருமளவிலான பக்தர் கூட்டம்
இதன்போது பக்தர்கள் தீச்சட்டி, காவடி, தூக்கு காவடி என எடுத்து நேர்த்தி கடன்களை நிறைவு செய்துள்ளார்கள்.

ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் கடந்த மாதம் 108 அடி உயரம் கொண்ட நவதள இராஜகோபுரம் சிறப்பாக அமைக்கப்பட்டு கும்பாபிசேகம் நடைபெற்றுள்ளது.
ஆலய திருவிழாக்கள் இடம்பெற்று வருகின்றதுடன் இன்று (03.07.2023) தீர்த்தத்திருவிழாவுடன் ஆண்டு திருவிழாக்கள் நிறைவு பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவம்

வரலாற்று சிறப்புமிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்திர மகோற்சவத்தின் தீர்த்த திருவிழா இன்றைய தினம் இடம்பெற்றது.

ஆலயத்தில் காலை இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து , நாகபூசணி அம்மனின் , பிள்ளையார் மற்றும் முருகன் சகிதம் கங்காதரணியில் தீர்த்தமாடினார்.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ ஆலயத்தில் இருந்து தீர்த்தக்கரைக்கு எழுந்தருளினார்.
செய்தி-தீபன்
மட்டக்களப்பு தேர்த்திருவிழா
 
  
கிழக்கிலங்கையில் புகழ்பெற்ற மட்டக்களப்பு வந்தாறுமூலை அருள்மிகு ஸ்ரீ தேவி பூமிதேவி சமேத ஸ்ரீ மகா விஷ்ணு தேவஸ்தான வருடாந்த பிரமோற்சவ தேர் திருவிழா நேற்று(02.07.2023) ஆயிரக்கணக்கான பக்தர்கள புடைசூழ நடைபெற்றது.
ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வு கடந்த புதன்கிழமை (21.06.2023) ஆரம்பமானது.

சுவாமி உள்வீதி, வெளி வீதி வலம் வந்து, இன்று(03.07.2023) தீ மிதிப்புடன், களுவன்கேணி இந்து சமுத்திரத்தில் நடைபெற்ற தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெற்றது.
பிரம்மோற்சவ பிரதம குரு சிவ ஸ்ரீ குக.அரவிந்த குருக்களின் தலைமையில் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
செய்தி-ருசாத்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW | 
















 
                                            
                                                                                                                                     
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        