ஆஸ்கர் விருது விழா: உக்ரைன் அதிபரின் கோரிக்கை நிராகரிப்பு
ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட உலகில் உயரிய விருதாக கருதப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் எதிர்வரும் 12ம் திகதி நடைபெறவுள்ளது.
டால்பி அரங்கில் பிரமாண்டமாக நடக்கும் நிகழ்ச்சியில், உலகம் முழுதும் இருந்து பல்வேறு திரைக் கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்த விழாவில் கலாச்சாரம் குறித்து தொடக்க உரை நிகழ்த்த உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்திருந்தார்.
அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை மறுத்த வோலோமிடிர் ஜெலன்ஸ்கி, தனக்கு அனுமதி கிடைக்கும் என நம்புவதாவும் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஆஸ்கார் விழாவில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது .