க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo)

Batticaloa Jaffna Sri Lanka Economic Crisis Department of Examinations Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Jun 19, 2022 08:02 AM GMT
Report

கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் எரிபொருளை பெற்றுத்தரக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணிகள் இன்று(19) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இடம் பெற்று வருகின்றது.

பணி பகிஷ்கரிப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்ற மதிப்பீட்டாளர்களுக்கான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக விசேடமாக கல்வி அமைச்சினால் வழங்கப்பட்ட படிவத்தினை பயன்படுத்தி எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து பணி பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

படிவம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

தூர பிரதேசங்களில் இருந்து குறிப்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள மதிப்பீட்டாளர்கள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வந்து தமது மதிப்பீட்டு பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக வழங்கப்பட்ட படிவத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கவில்லை என தெரிவித்துள்ளனர்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

அதனை தொடர்ந்து அரசாங்க அதிபர் யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் இரண்டு மணிக்கு பின்னர் பிரத்தியேகமாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து மதிப்பீட்டு பணிகள் ஆரம்பமாகின.

மேலும், இன்றைய தினமும் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத சந்தர்ப்பத்தில் மதிப்பீட்டாளர்கள் தமது பணி பகிஷ்கரிப்பை தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

எரிபொருள் வழங்குமாறு கோரி மட்டக்களப்பு மாவட்டத்தில் கா.பொ.த.சாதாரண தர பரீட்சை வினாத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் இன்று(19) பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய இந்த பணி பகிஷ்கரிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரிக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்ட பேரணியானது ஆரம்பமாகியுள்ளது.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் க.பொ.த சாதாரண பரீட்சை மதிப்பீட்டு பணியில் ஈடுபட்ட சுமார் 1200 ஆசிரியர்கள் இன்றையதினம் கலந்துகொண்டுள்ளனர்.

போராட்டம்

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர தேசிய பாடசாலை, புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை, புனித மிக்கேல் கல்லூரி போன்ற பரீட்சை மதிப்பீட்டு நிலையங்களில் கடமையாற்றும் ஆசிரியர்களே ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு எரிபொருள் வழங்குவதில் இலகுவான பொறிமுறையை வழங்கவேண்டுமென கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள்.

”பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் பணிப்புரையயை நடமுறைப்படுத்து, பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களின் மனநிலையை குழப்பி கல்வியை சீரழிக்காதே, பரீட்சை மதிப்பீட்டாளர்களுக்கு உடன் எரிபொருள் வழங்கு” என சுலோக அட்டையை ஏந்தியவாறு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த பேரணியானது மட்டக்களப்பு நகரூடாக சென்று மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினை சென்றடைந்து அங்கு பொலிஸ் நிலையம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினை முற்றாக முடக்கிய போராட்டக்காரர்கள் அங்கு தமக்கான எரிபொருளை கோரி போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது தமக்கு அந்த அதிகாரம் இல்லையெனவும் தமது சேவைக்கு இடமளிக்குமாறும் அவ்வாறு இல்லாவிட்டால் பொலிஸாரினால் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தவேண்டிய நிலையேற்படும் என மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணியானது மட்டக்களப்பு மாவட்ட செயலகம் வரையில் சென்றுள்ளது.

கலந்துரையாடல்

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்ட பேரணி சென்றுள்ளது. அங்கு வாயிற்கதவுகள் பூட்டப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த நிலையில் ஐந்து பேர் மாவட்ட அரசாங்க அதிபருடன் பேசுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பரீட்சை மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு ஐந்து லீட்டர் பெட்ரோல் வழங்குவது அல்லது போக்குவரத்து ஒழுங்குகளை செய்து வழங்குவது அல்லது பரீட்சை ஆணையாளருடன் கலந்துரையாடி தற்காலிகமாக மதிப்பீட்டு நடவடிக்கைகளை ஒத்திவைப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தர பரீட்சை வினாத்தாள்கள் திருத்தும் பணியில் ஈடுபட்டவர்கள் போராட்டம்(Photo) | Ordinary Level Examination Question Papers

மேலும், இதனை ஏற்றுக்கொண்டு போராட்டத்தினை தற்காலிகமாக இடைநிறுத்தி தமது கடமைகளில் ஈடுபடுவதாகவும் இதன்போது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் பொன்னுத்துரை உதயரூபன் தெரிவித்துள்ளார்.

பரீட்சை ஆணையாளர் நாயகத்தினால் பரீட்சை மதிப்பீட்டடாளர்களுக்கு வழங்கப்பட்ட கடிதத்தை எந்தவொரு எரிபொருள் நிலைய பொறுப்பாளர்களும், பணியில் ஈடுபட்டுள்ள பொலிசாரும் முன்னுரிமை வழங்கவில்லை என பரீட்சை மதிப்பீட்டு ஆசிரியர்கள் விசனம் தெரிவிக்கின்றார்கள்.

செய்திகள்-குமார்

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US