சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்து எழுந்துள்ள சர்ச்சை
சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த நிலையில், மீண்டும் சாதாரண தரப் பரீட்சை யை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வரும் செய்தி உண்மைக்குபுறம்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
அண்மைய நாட்களில் இடம்பெற்ற பரீட்சை மோசடியே இதற்குக் காரணம் எனவும் குறித்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை
இருப்பினும், மீண்டும் சாதாரண தரப் பரீட்சையை நடத்த எந்தவொரு திட்டமும் இல்லையென பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரீட்சை மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும், சமூக ஊடகங்களில் பரவும் தகவல்களுக்கு அப்பால் உரிய தரவுகளைப் பயன்படுத்துவது முக்கியம் என்று தெரிவிக்கப்படுகிறது.