மகிந்தவின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரி தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கை ஜூன் 19 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு நீதவான் ஓஷத மகாராச்சி உத்தரவிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்த நிலையில் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பிணையில் விடுவிப்பு
சந்தேகநபர் இன்று (16) நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையான போதே இந்த உத்தரவு பிறப்பிக்க்பபட்டுள்ளது.

நெவில் வன்னியாராச்சி, 28 மில்லியனுக்கும் அதிகமான சொத்துக்களை எவ்வாறு பெற்றார் என்பதை விளக்கமளிக்க தவறியதன் காரணமாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 2 நாட்கள் முன்
மீண்டும் வந்த கதிர், ஞானம்.. அதிர்ச்சியில் ஜனனி மற்றும் பெண்கள்.. எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்.. Cineulagam
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri