பழ.நெடுமாறனை விசாரிக்க உத்தரவு! தீவிரமடையும் உளவுத்துறை விசாரணைகள்-செய்திகளின் தொகுப்பு
பழ.நெடுமாறனின் கருத்து உலக தமிழர் மத்தியிலும் இலங்கை அரசு மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ளது.
விடுதலைப்புலிகள் மற்றும் இலங்கை இராணுவம் இடையே 2009ஆம் ஆண்டு இறுதிகட்ட போர் நடைபெற்றது.
அந்த சமயத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் போரில் இறந்துவிட்டதாக அறிவித்த இலங்கை அரசு, அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்தது.
என்றாலும் கூட பிரபாகரன் உயிரிழக்கவில்லை, அவர் உயிரோடுதான் இருக்கிறார் என்று பழ.நெடுமாறன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அவரது கருத்தை சாதாரண விடயமாக கருத முடியாது என, பிரபாகரன் தொடர்பான தகவகல்களை மீண்டும் திரட்ட இந்திய மத்திய உளவுப்பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பான தகவல்களை தமிழ்நாட்டின் உளவுத்துறை காவல்துறையினரும் தேட ஆரம்பித்துள்ளனர்.
பிரபாகரனின் மரணம் தொடர்பாக திரட்டப்பட்ட ஆவணங்கள் அனைத்தும் தற்போது மீள்பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன. இது தொடர்பான புலனாய்வு விடயங்களும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த தகவலை வெளியிட்ட நெடுமாறன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைவரையும் உளவுப்பிரிவினர் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
தற்போது நெடுமாறன் மற்றும் அவரது குழு உறுப்பினர்களின் உள்ளிட்டோரின் நடமாட்டம் அனைத்தும் உளவுப்பிரிவால் கண்காணிப்புக்கு உள்வாங்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது கருத்தை இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் முற்றாக மறுத்துள்ளது.
இது தொடர்பில் இலங்கை இராணுவ செய்தி தொடர்பாளர்,''2009ம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டார். அதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.”என தெரிவித்திருந்தார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

பல்லவனை தள்ளிவிட்டு கொச்சையாக பேசிய வானதி அண்ணன்... அய்யனார் துணை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
