கொள்ளுப்பிட்டியவில் கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துமாறு உத்தரவு
தனிமைச் சட்டங்களை மீறி கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் உள்ள கிரெஸ்காட் மோனார்க் சொகுசு அடுக்குமாடி வளாகத்தில் விருந்து நடத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரையும் வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரதேசத்தின் பொது சுகாதார அதிகாரி இதனை தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறியதற்காக பங்கேற்பாளர்கள் 14 நாட்களுக்கு வீடுகளில் தனிமைப்படுத்தபடுவார்கள் என சுகாதார மருத்துவ அதிகாரி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வளாகத்தின் கூரை உச்சியில் உள்ள நீச்சல் குளம் அருகே விருந்தை நடத்திய இரண்டு வெளிநாட்டினர் மற்றும் மூன்று பெண்கள் உட்பட ஒன்பது பேரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் நேற்று கைது செய்தனர்.
கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சந்தேக நபர்களுக்கு தலா 1 மில்லியன் ரூபா சொந்த பிணை வழங்கப்பட்டது.
இந்த வளாகத்தில் மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் உறுப்பினர்கள் விருந்தில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
விருந்தில் வெளிநாட்டவர்கள் யாரும் கலந்து
கொள்ளாததால் அவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொது
சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார்.
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan