ஜனாதிபதி கோட்டபாயவின் அதிரடி உத்தரவு
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க மேற்கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
எந்தவொரு நபருக்கும் தாம் விரும்புவது போன்று ஆர்ப்பாட்டம் செய்வதற்கு இடமளிக்குமாறு ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்துபவர்கள் தொடர்பில் மக்கள் தீர்மானம் எடுத்துக் கொள்வார்கள். ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் மற்றும் போராட்டம் நடத்துபவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவையில் கேட்டுக்கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், தொடர்ந்தும் அவர்கள் வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்தை முன்னெடுப்பார்கள் எனவும் அமைச்சர் சரத் வீரசேகர அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam
