அமெரிக்காவில் மோசமான செயலில் ஈடுபட்ட இலங்கை வம்சாவழி தமிழ் மருத்துவர்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
இலங்கை வம்சாவழியான தமிழ் மருத்துவர் ஒருவருக்கு அமெரிக்காவின் ஸ்டப்போட் நீதிமன்றில் உடல்நலப்பாதுகாப்பு மோசடிக்காக நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவர் நோயாளிகளிடமிருந்து பணம் அறவிடவில்லை என தெரிவித்து உளவியல் சிகிச்சை சேவைகளுக்கான அரச மருத்துவ உதவி திட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 840,000 டொலர்களை பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் 1,000 க்கும் மேற்பட்ட மருத்துவ உதவி தேவைப்படும் நோயாளிகளைச் சேர்ப்பதற்காக அவர் மூன்றாம் தரப்பு நிறுவனம் ஒன்றுக்கு பணம் கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதேநேரம் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சேவைகளுக்காக ஒரு மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான பணத்தை அவர் பெற்றுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல்நலப்பாதுகாப்பு மோசடி
கடந்த நவம்பரில், மருத்துவர் உடல்நலப் பாதுகாப்பு மோசடி மற்றும் கூட்டாட்சி சுகாதாரத் திட்டங்களை மீறிய குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று நீதிமன்றத்தில் முன்னிலையான அவரை, சிறைத்தண்டனைக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மேற்பார்வையில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவர் 1.6 மில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை அரசுக்கு திருப்பிச் செலுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.
அவற்றில் 500,000 டொலர்களை 60 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும் என்று அமெரிக்காவின் சட்டத்தரணிகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
உளநல ஆலோசனை
இலங்கையின் குடிமகனாகவும், அமெரிக்காவின் சட்டபூர்வமான, நிரந்தர குடிமகனாகவும் இருக்கும் தனது சிறைத்தண்டனையை முடிக்கும் போது குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
அவர் 2019 ஜூன் முதல் 2022 மே வரையில், 839,724 டொலர்களுக்கான தவறான உளவியல் சிகிச்சை சேவைக் கோரிக்கைகளை அரச மருத்துவ உதவித்திட்டத்திற்கு சமர்ப்பித்துள்ளார்.
தனது பணியாளர்கள் ஊடாக நோயாளிகளுக்கு மிக குறுகிய அளவிலான உளநல
ஆலோசனை வழங்கியதாகவும், 60 நிமிடங்கள் வரையில் நோயாளிகளுக்கு சேவை வழங்கியதாக
போலித்தகவல்களை வெளியிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.