ஜனாதிபதி சற்றுமுன்னர் பிறப்பித்துள்ள உத்தரவு
எதிர்வரும் ரமழான் பண்டிகையை முன்னிட்டு பேரீச்சம்பழங்களுக்கு விதிக்கப்பட்ட விசேட பண்டங்கள் வரியை கிலோ ஒன்றுக்கு 200 ரூபாவிலிருந்து ஒரு ரூபாவாக குறைக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்கள், நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், தொண்டர் அமைப்புகள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து எந்தவித அந்நியச் செலாவணியும் தொடர்புபடாமல் பரிசாக அல்லது நன்கொடையாக அனுப்பப்படும் பேரீச்சம் பழங்களுக்கு மாத்திரம் இந்த வரிச்சலுகை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் பண்டிகை மார்ச் 23 முதல் ஏப்ரல் 21 வரை முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
You may like this video




