இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினை - ஜனாதிபதி கோட்டபாய பிறப்பித்துள்ள உத்தரவு
மக்களின் வாழ்வாதாரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மின்சார நெருக்கடிக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு தொடர்பான நிலைமைகள் தொடர்பில் மின்சாரம் மற்றும் எரிசக்தி துறைகளின் தலைவர்களுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
நிலக்கரி மற்றும் எரிபொருளைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதில் ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இலங்கையிடம் உள்ள நிலக்கரி கையிருப்பு மின்சார நெருக்கடியின்றி நிர்வகிப்பதற்கு போதுமானது எனவும், எரிபொருளில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை நிர்வகிப்பதன் மூலம் மின்வெட்டை தவிர்க்க முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலைமையை சமாளித்து மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே, மின்வெட்டு இன்றி செயற்படுவதே தற்போதைய நோக்கமாகும் என குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும் தேவை ஏற்பட்டால் மின்வெட்டு ஏற்படும் என கலந்துரையாடலில் கலந்து கொண்ட இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் எம்.ஆர்.ரணதுங்க தெரிவித்துள்ளார்.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |