தற்கொலைதாரி சஹ்ரானின் சகோதரிக்கு நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் சீயோன் தேவாலய குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உள்ளிட்ட 64 பேரை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம்.றிஸ்வான் இன்றைய தினம் எழுத்து மூலம் குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற பல்வேறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களில் 5 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களுடன் சேர்ந்த வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட தற்கொலைதாரி சஹ்ரானின் சகோதரி, அவரின் கணவர், சீயோன் தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட ஆசாத்தின் தாயார் மற்றும் தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்வதற்கு பேருந்து ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உள்ளிட்ட 64 பேரின் விளக்கமறியல் இன்றைய தினம் நீடிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் வைரஸ் காரணமாக அழைத்து வரமுடியாத காரணத்தினாலும் கைதிகளுக்கு கோவிட் தொற்று இருப்பதனால் அவர்களை காணொளி மூலம் காட்டமுடியாத காரணத்தினால் எழுத்து மூலம் நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் 64 பேருக்கும் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
