வெளிநாட்டுப் பெண்ணை தகாத முறைக்கு உட்படுத்திய நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
வெளிநாட்டுப் பெண் ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட ஒருவரை கடுவெல நீதிவான் நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.
தமது அநாகரீகமான வெளிப்பாட்டின் மூலம் வெளிநாட்டுப் பெண்ணை தகாத முறைக்கு உட்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தலங்கம பொலிஸார் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.
குற்றப்பத்திரிகை தாக்கல்
இதன்போது குறைந்த வேகத்தில் வாகனத்தை ஓட்டிச் சென்ற போது சாரதியான குறித்த நபர், தகாத முறைக்கு உட்படுத்தியதாகவும், இந்த சம்பவத்தால் தான் அவமானப்படுத்தப்பட்டதாகவும் குறித்த பெண் முறையிட்டிருந்தார்.
இந்த வழக்கு கணிசமான காலத்திற்கு தொடர்ந்தது, அந்த வெளிநாட்டுப் பெண் குறிப்பிட்ட திகதிகளில் இடைவிடாது நீதிமன்றத்தில் முன்னிலையாகி வந்தார்.
எனினும் இறுதி கட்டத்தில், அவர் வழக்கு விசாரணைகளுக்கு சமுகம் தராமையினால் குற்றப்பத்திரிகையில் தகாத முறைக்கு உட்படுத்தியமை எவ்வாறு நிகழ்ந்தது என்பது தொடர்பில் பிரதிவாதியின் சட்டத்தரணியால், பொலிஸாரால் விசாரிக்கப்பட்டபோது, அவர் ஆதாரங்களை நிரூபிக்காமல் தெளிவற்ற பதிலை அளித்துள்ளார்.
இதனையடுத்து சாட்சியங்களை பரிசீலித்த நீதிவான், பொலிஸார்; வழக்கை போதுமான அளவு நிரூபிக்கவில்லை என்று கண்டறிந்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |