சுரேஷ் சாலிக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு
அரச புலனாய்வுத்துறையின் தலைவர் சுரேஷ் சாலிக்கு (Suresh Salay) எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல (Buddhika Sri Ragala) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு இந்த உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இணையம் மூலமான சர்வதேச கலந்துரையாடல் ஒன்றின் போது அருட்தந்தை சிறில் காமினி (Cyril Gamini), சுமத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் சுரேஷ் சாலி ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்துறையில் முறையிட்டிருந்தார்.
இந்த முறைப்பாட்டில், தாம் தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் ஹாசிமுக்கு (Saharan Hashim) நிதியுதவி செய்ததாக அருட்தந்தை சிறில் காமினி குற்றம் சுமத்தியிருந்தார் என்று சாலி குறிப்பிட்டிருந்தார்.
இந்தக்குற்றச்சாட்டு காரணமாக தமக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும் தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சாலி தமது முறைப்பாட்டில் தொிவித்திருந்தார்.
இந்தநிலையில் குற்றப்புலனாய்வுத்துறையின் இது தொடர்பான சமர்ப்பணத்தை பரிசீலனை செய்த நீதிவான், விசாரணைக்கான உத்தரவை பிறப்பித்தார்.
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri