ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பணிகளை இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
பிங்கிரிய தொழில் வலயத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் உட்பட ஏனைய கட்டுமானங்களின் முன்னேற்றம் தொடர்பில் ஆராய்வதற்காக கலந்துரையாடல் ஒன்று இடமெப்ற்றுள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (08) நடைபெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பணிப்புரை விடுத்துள்ளார்.
மேற்பார்வை
உட்கட்டமைப்பு அபிவிருத்தி இவ்வருட இறுதிக்குள் நிறைவு செய்யுமாறு பணிப்புரை விடுத்துள்ள ஜனாதிபதி, எதிர்வரும் ஜூன் மாதம் அந்த பணிகளை மேற்பார்வைச் செய்ய எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மூன்று கட்டங்களில் கீழ் பிங்கிரிய தொழில் வலயத்தின் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், முதல்கட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறிப்பிடத்தக்க அளவில் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
