கஞ்சிப்பானி இம்ரான் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு
இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகக் கூறப்படும் கஞ்சிபானி இம்ரானுக்கு பிணையில் கையொப்பமிட்ட மூவருக்கும் உடனடியாக நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புமாறு கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா உத்தரவிட்டுள்ளார்.
கொலை முயற்சி மற்றும் நபருக்கு உதவியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிராக இன்று (04) வழக்கு தாக்கல் செய்யப்பட்ட போது கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் வழங்கிய வாக்குமூலத்தை கருத்திற்கொண்டு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட உத்தரவின் பிரகாரம், கஞ்சிபானி இம்ரானை பிணை முறிகளுக்கு உட்பட்டு பிணையில் விடுவிக்குமாறு முன்னர் உத்தரவிடப்பட்டிருந்தது.
பிணையில் விடுவிக்கப்பட்ட கஞ்சிபானி இம்ரான் தற்போது இரகசியமாக வெளிநாடு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.