பணிப்பகிஷ்கரிப்புக்கு திருகோணமலையிலும் ஆதரவு
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளினதும் வெளிநோயாளர்கள் பிரிவுகளும் இயங்கவில்லை, இதனால் நோயாளர்கள் மிகவும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மார்ச் 01 கருப்பு தினமாக அனுஷ்டிக்குமாறு 40 தொழில் சங்கங்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இதற்கு திருகோணமலை மாவட்டத்திலும் பூரண ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பணிபகிஷ்கரிப்பு
அந்த வகையில் திருகோணமலை - மூதூர் நகரிலுள்ள இலங்கை வங்கி, மக்கள் வங்கி போன்றன மூடப்பட்டிருந்தன. இதனால் சேவை பெற வருகைதந்தோர் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
திருகோணமலை பொது வைத்தியசாலை - கிண்ணியா தள வைத்தியசாலை - மூதூர் தள வைத்தியசாலையின் வைத்தியர்கள், மருந்து கலவையாளர்கள், எக்ஸ்ரே பிரிவினர் பணிபகிஷ்கரியில் ஈடுபட்டனர்.
இதனால் வைத்திய சேவை பெற வருகைதந்தோர் திரும்பி சென்றதையும் அவதானிக்க முடிந்தது.
வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் சேவையில் ஈடுபட்டாலும் கையில் கருத்தப்பட்டி அணிந்து தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அத்துடன் வைத்தியசாலையின் அவசர பிரிவு மாத்திரமே இயங்கியமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
