ஒடுக்கப்படும் தோட்டத் தொழிலாளர்கள்! மஸ்கெலியாவில் கவனயீர்ப்பு போராட்டம் (Photos)
மஸ்கெலியா பெருந்தோட்ட கம்பனிக்கு சொந்தமான தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்கள் நேற்று காலை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாளாந்த சம்பளத்தை உடனடியாக 1000 ரூபாவாக அதிகரிக்குமாறு கோரி குறித்த போராட்டத்தை அவர்கள் முன்னெடுத்துள்ளனர்.
போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர்கள் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
1000 ரூபாவிற்கும் குறைவான சம்பளம்
இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளர் கணபதி நகுலேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் உள்ள ஏனைய பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் நாளாந்த சம்பளம் 1000 ரூபா முதல் 2000 ரூபா வரை வழங்கப்படுகிறது.
மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனிக்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் மட்டும் 1000 ரூபாவிற்கும் குறைவான சம்பளம் கொடுத்து அதிக இலாபம் பெற்று அப்பாவி தோட்ட தொழிலாளர்கள் ஒடுக்கப்படுகின்றனர்.
கடும் பொருளாதார நெருக்கடி
தோட்டத் தொழிலாளர்கள் தற்போது கடும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றனர். மூன்று வேளை உண்பவர்கள் தறபோது ஒரு வேளை மாத்திரமே உண்கின்றனர்.
குழந்தைகளுடன் வறுமையில்
வாடுகின்றனர்.
இதனால் எதிர்காலத்தில் பட்டினியால் இறக்க நேரிடும் என
தெரிவித்துள்ளார்.



இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ள சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரபலம்.. எங்கெல்லாம் சென்றுள்ளார் பாருங்க Cineulagam

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
