தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்க எதிர்ப்பு! கலையரசன் எம்.பியின் தலையீட்டால் நிறுத்தப்பட்ட பணிகள்
கல்முனை மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பெரியநீலாவணை பிரதேசத்தில் தனியார் தொலைத்தொடர்பு கோபுரமொன்றை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் குறித்த பிரதேச மக்களின் அனுமதி இன்றியும், சமூக அமைப்புகளின் அனுமதி இன்றியும் கடந்த மூன்று வார காலமாக மக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் குறித்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியுள்ளார்.
குறித்த பிரதேசத்தினை சேர்ந்தவர்கள் அல்லாத பிற பகுதிகளை சேர்ந்தவர்களின் கையொப்பங்களை வைத்துக் கொண்டு குடியிருப்புக்கு மத்தியில் அந்த தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், இதனை தொடர்ந்தே எதிர்ப்புகள் எழ தொடங்கியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதேவேளை சம்பவ இடத்திற்கு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சந்திரசேகரம் ராஜன், குபேரன் ஆகியோரும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri

ரோஹினி, க்ரிஷை பற்றி முத்துவிடம் கூறிய மீனா, அடுத்து என்ன நடக்கப்போகிறது.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
