அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவோம்! சஜித் அறைகூவல்
அரசாங்கத்தக்கு சிவப்பு எச்சரிக்கையை வழங்குவதற்கு மக்கள் அணிதிரள வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்துள்ளார்.
தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், " மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அநுர அரசாங்கம் உறுதியளித்திருந்தது. ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது என எமக்கு தகவல் கிடைத்துள்ளது.
மின்சாரக் கட்டண
மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியவர்கள், இன்று மக்களை ஏமாற்றுகின்றனர். எனவே, இந்த அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கையை விடுப்பதற்காக, உள்ளுராட்சிசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரிக்க வேண்டும்.
மக்களை எல்லா வழிகளிலும் ஏமாற்றிவரும் இந்த அரசாங்கத்துக்கு உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பாடம் கற்பிக்க வேண்டும்.
நாட்டு மக்களுக்கு உப்பைக்கூட பெற்றுக்கொடுக்க முடியாதவர்களே ஆட்சிபீடத்தில் உள்ளனர்” என கூறியுள்ளார்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

இந்தியாவின் மிகவும் படித்த அரசியல்வாதி.., ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு இளம் வயதிலேயே இறந்த நபர் யார்? News Lankasri

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
