மத்திய கிழக்கில் நிலவும் போர் நெருக்கடி! எதிர்க்கட்சிகள் தீவிர ஆலோசனை
மத்திய கிழக்கில் நிலவும் போர் நெருக்கடியால் இலங்கைக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று ( 03.03.2026 ) விசேட கூட்டம் ஒன்று நடைபெற்றுள்ளது.
நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்புரி
மத்திய கிழக்கு பிராந்தியத்தில், குறிப்பாக ஈரானுடன் இலங்கை மேற்கொண்டு வரும் பாரிய இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
இந்தப் போர்ச் சூழலால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சுமார் பத்து இலட்சம் (1 million) இலங்கைத் தொழிலாளர்களின் உயிர் பாதுகாப்பு மற்றும் நலன்புரி விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களது தொழில் வாய்ப்புகளை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்த விவகாரங்கள் மிகவும் அவசரமானவை என்பதால், அரசாங்கம் உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சஜித் பிரேமதாச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அமேசான் தரவு மையங்கள் மீது ட்ரோன் தாக்குதல்: வங்கி சேவைகள் முடக்கம் - உடனடியாக மாற்றப்படும் தரவு வலயங்கள்
மூன்று முடிச்சு சீரியலில் ஹீரோவாக நடிக்கும் நியாஸ் கான் வாங்கும் சம்பளம்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
ஈஸ்வரி மருத்துவ செலவு இத்தனை லட்சமா, குணசேகரன் புதுபிளான், தர்ஷினி அதிரடி... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri