அர்ச்சுனா எம்.பியின் கருத்துகளுக்கு வடக்கிலிருந்து எதிர்ப்பு
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கருத்துக்கு வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் முரளிதரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
“தையிட்டியில் காணப்படும் விகாரையை இடிக்க முடியாதென கூறும் அர்ச்சுனா இராமநாதன் பெரிய விளானில் இருப்பதாக கூறும் தனது பத்து ஏக்கர் காணியை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளிப்பாரா?
காணி தொடர்பான முழுமையான விபரங்கள்
மண்டை தீவில் கடற்படை சுவீகரித்துள்ள காணியை மக்களுக்கு முடிந்தால் அவர் பெற்றுக் கொடுக்கட்டும். காணி தொடர்பான முழுமையான விபரங்கள் அர்ச்சுனா உட்பட எந்தவித நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கிடையாது. இவர்கள் காணி தொடர்பில் எப்படி சரியான விடையங்களை கொண்டு செல்ல முடியும்?
வடமராட்சி கிழக்கில் கோரியடியில் இருந்து சுண்டிக்குளம் வரை மக்களின் காணிகள் தேசிய பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தேசிய பூங்காவில் மக்கள் இருக்க முடியாது. ஆனால் மக்கள் வசிக்கின்றார்கள். காலப்போக்கில் அவர்களை காணியை விட்டு அகற்றுவார்கள். இது தொடர்பான விடயங்களை அர்ச்சுனா முதலில் தேடி அறிந்து பேச வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |