நாடாளுமன்றில் விவாதத்தை ஆரம்பிக்கும் சம்பிரதாயத்தில் ஏற்பட்ட குழப்பம்
நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தை ஆரம்பிக்கும் வாய்ப்பு சம்பிரதாயப்படி எதிர்க்கட்சிக்கே வழங்கப்படுவது வழக்கம்.
ஆனால், சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் நளிந்த ஜயதிஸ்ஸவுக்கு ஒலிவாங்கியை வழங்கியபோது, சபையிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர். சில நிமிடங்களுக்கு நீடித்த இந்த சம்பவத்தால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.

வரவுசெலவுத்திட்ட விவாதம்
இது குறித்து கருத்துத் தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இந்தச் சம்பிரதாயம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், எதிர்க்கட்சிக்கு விவாதத்தைத் தொடங்குவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உறுதியளித்திருந்தார்.
இதையடுத்து, எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா உடனடியாக விவாதத்தைத் தொடங்கி வைத்து, "பரவாயில்லை, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே, நாம் ஆரம்பத்தில் இருந்து தொடங்கலாம்.
நான் விவாதத்தைத் தொடங்குகிறேன்" என்று கூறி, வரவுசெலவுத் திட்ட விவாதத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்திருந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam