ட்ரம்ப்புக்கு சவால் விடுக்க இந்தியாவுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!
வரி விடயத்தில் இந்தியாவிற்கு பெரும் சவாலாக மாறியுள்ள அமெரிக்காவின் முடிவுகள் தொர்பில் பல்வேறு கருத்துக்களை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனினும் தற்போது அமெரிக்காவுக்கு சவால் விடும் ஒரு நகர்வை ரஷ்யா மூலமாக இந்தியா பெற்றுள்ளமை சர்வதேச பரப்பில் பேசுபொருளாகியுள்ளது.
ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட்டின் இயக்குநர் ஜெனரல் அலெக்சாண்டர் மிகீவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தித்தபோது இந்தியாவுக்கான ஆயுத ஏற்றுமது தொடர்பில் சில கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.
போர் விமானங்கள்
அப்போது, "இந்தியாவுக்கு SU-57E எனும் 5ஆம் தலைமுறை போர் விமானத்தை வழங்க ரஷ்யா தயார் எனவும், மட்டுல்லாது அதை இந்தியாவிலிலேயே தயாரிக்கவும், தயாரிப்புகளை ஒழுங்கமைக்கவும் ரஷ்யா முன்வந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Su-30MKI ரக விமானத்தை இந்திய தற்போது உற்பத்தி செய்து வருகிறது.
அது மட்டுமல்லாது AMCA விமான உற்பத்திக்கும் ரஷ்யா உதவுவதாக தெரிவித்திருக்கிறது.
இந்நிலையில் இந்த வாய்ப்பு அமெரிக்காவுக்கு பெரும் சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தெருக்களில் கிடந்த சடலங்கள்! உள்நாட்டில் வெடித்த கலவரம்..இரண்டு நாட்களில் 1000 பேர் பலி News Lankasri
