புதிய மாற்றத்தால் புலம்பெயர் தமிழர்களுக்கு ஏற்படவுள்ள வாய்ப்புக்கள் (VIDEO)
இரட்டை பிரஜாவுரிமை மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான நிலை காணப்படுகின்றது. அதாவது, தமிழ் மக்களில் பெரும்பாலானோர் புலம்பெயர் தமிழர்களாக உள்ளமையினால் எதிர்காலத்தில் இலங்கை அரசியலில் முக்கியமாக தமிழர் அரசியலில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
19 ஆம் திருத்தத்தில் இருந்து 20 ஆம் திருத்தத்திற்கான பாய்ச்சலானது முக்கியமாக ஜனாதிபதியின் அதிகாரங்களை அதிகரிப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக காணப்படுகின்றது.
அதாவது இவற்றின் மூலம் ஏற்பட்டுள்ள நன்மையாக புலம்பெயர் தமிழர்கள் முன்வாசல் வழியாக நேரடியாக இலங்கையின் நாடாளுமன்றத்தில் ,மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.



