திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் குளத்தின் நான்கு வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக கந்தளாய் குளத்தின் மேலதிக நீரை வெளியேற்றுவதற்காக நான்கு வான் கதவுகள் அரை அடிக்கு இன்று(11) திறந்து விடப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தின் நீரினைப் பயன்படுத்தி பதினாயிரத்து 600 ஏக்கரில் வேளாண்மை செய்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கந்தளாய் குளத்தில் தற்போது 88271 ஏக்கர் அடி நீர் உள்ளதாகவும் கந்தளாய் நீர்ப்பாசன பொறியியலாளர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அனைத்து வான் கதவுகளைத் திறந்து விடுவதற்கான
சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் பொறியியலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
