மட்டக்களப்பில் 3 குளங்களின் 9 வான்கதவுகள் திறப்பு
மட்டக்களப்பில் உன்னிச்சை, நவகிரி, றூகம், ஆகிய குளங்களின 9 வான்கதவுகள் இன்று திறக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நடராசா நகரெட்ணம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருகின்றதையடுத்து குளங்களில் நீர் நிரம்ப ஆரம்பித்துள்ளதுடன் உன்னிச்சை குளத்தின் 3 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், நவகிரி குளத்தின் 2 வான்கதவுகள் 5 அடி உயரத்துக்கும், றூகம் குளத்தின் 2 வான்கதவுகள் 8 அடி உயரத்துக்கும் திறந்து விடப்பட்டுள்ளது.
உன்னிச்சைகுளம் 33 அடி நீர் கொள்ளனவு செய்யக்கூடியதும், நவகிரிகுளம் 31 அடி நீர் கொள்ளனவு செய்யக் கூடியதும், றூகம்குளம் 15 அடி 18 அங்குலம் நீர் கொள்ளனவு கொண்ட குளங்கள் ஆகும்.
இருந்த போதும் குளத்தின் நீர்மட்டம் உயர்ந்து வருவதையடுத்து தேவையற்ற நீரை வெளியேற்ற வேண்டியதையடுத்து இந்த குளங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.



அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
