இந்திய உதவியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் திறந்து வைப்பு!
இலங்கை - இந்திய நட்புறவு திட்டத்தின் கீழ் வவுனியாவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் இன்று (04) பயனாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை - இந்திய நிதி உதவி வீடமைப்பு வேலைத்திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் 100 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் வவுனியா செட்டிக்குளம், மெனிக்பாம், அருணோதயா நகரில் பூர்த்தி செய்யப்பட்ட 24 வீடுகள் இன்று உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டு பயனாளர்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் முதன்மை அதிதிகளாகக் கலந்து கொண்ட வீடமைப்பு மற்றும் கட்டட நிர்மாணத்துறை இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த, இந்திய துணை தூதுவர் ராகேஸ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோர் வீடுகளைத் திறந்து வைத்துள்ளனர்.
குறித்த வீடுகள் இந்திய நிதியுதவியின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகாரசபையால் அமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.கே.மஸ்தான், கு.திலீபன், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவர் துமிந்த சில்வா, மற்றும் அரச உயர் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.











விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரம்.., நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை News Lankasri

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

பிரித்தானியாவின் 23 பகுதிகளை குறிவைத்திருக்கும் ரஷ்யா... வெளியான வரைபடத்தால் அதிர்ச்சி News Lankasri

சேரன் எடுத்த திடீர் முடிவால் கண்ணீரில் சோழன், பாண்டியன், பல்லவன், நிலா... அய்யனார் துணை சோகமான புரொமோ Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
