இலங்கையின் இராணுவத் தளத்திற்கு ஆதரவாக தமிழகத்தை உளவு பார்த்த சீன உளவுத்துறை
இந்திய அரசு இலங்கை அரசை நம்பி மெத்தனமாக இருப்பது பேராபத்து இந்தியாவிற்கு ஏற்பட போகிறது என்பதை தமிழகத்திற்குள் இருக்கும் தங்களால் உணர முடிவதாக தமிழர் நல பேரியக்கத்தின் தலைவரும், இயக்குனருமான களஞ்சியம் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் இந்தியாவிற்கு வந்தார். அவர் வருகின்ற போது இந்தியாவினுடைய பிரதமர் நரேந்திர மோடி, அவரை வாரநாசிக்கு அழைத்தார்.
ஆனால் தமிழ் நாட்டிற்கு வரவேண்டும் என்று சீனா என்ன முடிவு செய்கிறது. அதுவும் மகாபலிபுரத்திற்கு வரவேண்டும், அங்கு வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என முடிவு செய்கிறார்கள்.
மூன்று மாதங்களுக்கு முன்பே சீன அரசின் உளவுத்துறை தமிழகத்தில் இறக்கிவிடப்படுகிறது. அப்பொழுதே நாங்கள் கூறினோம் இது இந்தியாவிற்கு பேராபத்து என்று.
இலங்கையில் தமது இராணுவ தளத்தை நிறுவிக் கொண்டிருக்க கூடிய சீனா, தமிழகத்தில் மிகப்பெரிய ஆய்வை அவர்கள் மேற்கொள்வதற்காக தான் இந்த சந்திப்பையே ஏற்பாடு செய்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
