கடுமையான அறிகுறிகள் இருந்தால் மட்டும் மருத்துவமனைக்கு செல்லுமாறு கோரிக்கை
கோவிட் நோயாளிகளை மருத்துவமனையில் சேர்ப்பது தொடர்பான எந்தவொரு பிரச்சினையையும் தெளிவுபடுத்த சுகாதார அமைச்சகம் பொதுமக்களுக்கு இரண்டு தொடர்பு எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, பொதுமக்கள் 1999 அல்லது 0117 966 366 என்ற இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் வழங்கியுள்ள, சுகாதார அமைச்சின் பேச்சாளர்- வைத்தியர் ஹேமந்த ஹேரத், குறைந்த ஆபத்தில் உள்ள நோயாளிகளை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) மூலம் சிகிச்சை மையத்திற்கு அழைத்துச் செல்வது பொருத்தமானது என்று சுட்டிக்காட்டினார்.
கடுமையான அறிகுறிகள் இருந்தால் மட்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் செல்லுமாறு அவர் கேட்டுள்ளார்.
அறிகுறியற்றவராக அல்லது இலேசான அறிகுறிகளைக் கொண்டிருப்போர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவது மருத்துவமனைகளில் நெரிசலை அதிகரிக்கும்.
அத்துடன் இது அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு ஒரு தடையாக இருக்கலாம் என்றும் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.