நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டால் நாடாளுமன்றில் உள்ள பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள்: இரா.சாணக்கியன்
நாடாளுமன்றில் 65 பேர் மட்டுமே மக்களுக்காக உள்ளதாகவும் 148 பேர் ராஜபக்சர்களுடனேயே தற்போதும் உள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட, நடத்தப்படும் நாடகங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. ஏனென்றால், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவை தெரிவு செய்வார்களெனத் தான் நினைக்கவில்லை.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டியவிற்கு வாக்களித்து, அவரை பிரதி சபாநாயகராகத் தெரிவு செய்த 148 பேரும் தற்போதும் ராஜபக்சர்களுடனேயே இருக்கின்றனர்.
எனவே, அவரை எதிர்த்துப் போட்டியிட்ட இம்தியாஸ் பாக்கிர் மார்க்கருக்கு வாக்களித்த 65 பேர் மட்டுமே மக்கள் பக்கம் உள்ளனர்.
மேலும் நாடாளுமன்றத்தில் என்ன நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டாலும்
இங்குள்ள நாடகக்காரர்கள், பொய்யர்கள் அதற்கு எதிராகவே வாக்களிப்பார்கள்.
ஏனென்றால் அவர்களுக்கு ராஜபக்சர்களை காப்பாற்ற வேண்டும்'' இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்பதிவிலேயே விஜய்யின் ஜனநாயகன் பட கலெக்ஷனை தோற்கடித்த ரஜினியின் ஜெயிலர் 2... மாஸ் கலெக்ஷன்.. Cineulagam
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan