கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையில் 54 வீதமானோர் மட்டுமே தயார்! ஆய்வில் வெளியான தகவல்
கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு இலங்கையில் 54 வீதமானோர் மட்டுமே தயாராக உள்ளனர் என்று இலங்கை அரசாங்க ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
38 வீதமானோர் இந்த விடயம் தொடர்பில் அறிந்திருக்கவில்லை. 8 வீதமானோர் தமக்கு ஒருபோதும் தடுப்பூசிகள் கிடைக்காது என்று கூறியுள்ளனர்.
குறிப்பாக 55 வீத சிங்களவர்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று பதிலளித்தனர், அதே நேரத்தில் 50 வீதத் தமிழர்கள், 59 வீத முஸ்லிம்கள், 56 வீத பறங்கியர் சமூகம் மற்றும் 68 வீத பிற இனத்தவர்கள் தங்களுக்கு தடுப்பூசி கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.
இதேவேளை தடுப்பூசியின் குறியீடு பக்க விளைவுகள், ஒவ்வாமை மற்றும் பாதுகாப்பின் காலம் குறித்து பெரும்பான்மையான பொதுமக்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தமை ஆய்வில் தெரியவந்துள்ளது.
இலங்கையின் நடத்தை ஆராய்ச்சி பிரிவு சுகாதார மேம்பாட்டு பணியகம் இந்த ஆய்வை நடத்தியது.