இலங்கையில் இணையம் ஊடாக நடக்கும் மோசடிகள் ! அதிரடியாக கைதான வெளிநாட்டவர்கள்
விசா நிபந்தனைகளை மீறி இலங்கையில் தங்கியிருந்து, இணையதளம் ஊடாகப் பாரிய நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்த 16 சீனப் பிரஜைகள் கொழும்பு 07, குருந்துவத்தை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 05, ஜாவத்தை வீதி மற்றும் டொன் கரொலிஸ் வீதி ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகளில் தங்கியிருந்த சீனர்கள் குழுவொன்று, சந்தேகத்துக்கிடமான முறையில் செயற்படுவதாகக் குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை
இதற்கமைய, குற்றப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போதே இவர்கள் அனைவரும் பிடிபட்டனர்.

சந்தேகநபர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட அதிநவீன இலத்திரனியல் உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதப் பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது 23 மடிக்கணினிகள், 11 கைத்தொலைபேசிகள், 7 ரௌட்டர்கள், 9 குரல் மொழிபெயர்ப்பு இயந்திரங்கள், வரி செலுத்தப்படாத 3 ஆயிரத்து 280 வெளிநாட்டு சிகரெட்டுகள் என்பவையே சந்தேகநபர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த நடவடிக்கை
இவ்வாறு கைது செய்யப்பட்ட 16 சீன ஆண்களும் இலங்கையிலிருந்து கொண்டு, வெளிநாடுகளில் உள்ள நபர்களைத் தொடர்பு கொண்டு 'பிரிமிட்' பாணியிலான நிதி மோசடிகளில் ஈடுபட்டு வந்தமை முதற்கட்ட விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

அத்துடன், இவர்கள் சுற்றுலா விசா நிபந்தனைகளை மீறி நீண்டகாலமாகத் தங்கியிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், அவர்களது விசா விபரங்கள் தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகளை குருந்துவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri
அதிர்ச்சி செய்தி சொன்ன பிறகு ஈஸ்வரிக்கு குட் நியூஸ் சொன்ன அப்பத்தா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
அடுத்த சில வாரங்களுக்குள்... ஈரானுக்கு சீனாவின் பேருதவி: அமெரிக்க உளவுத்துறை வெளிப்படை News Lankasri