ஒன்லைன் - நுண்நிதி கடன் ஒழுங்குப்படுத்தல் சட்டமூலம்
ஒன்லைன் மூலம் நுண்நிதி கடன் வழங்குவதை ஒழுங்குப்படுத்தும் நோக்கில் நுண்நிதி கடன் மற்றும் கடன் ஓழுங்குப்படுத்தும் அதிகார சபை சட்டமூலம் தொடர்பில் அரசாங்க பொது நிதி குழுவால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதன்படி, உரிமம் பெற்றவர்கள் மட்டுமே ஆன்லைனில் கடன்களை வழங்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது. வாடிக்கையாளர்களைப் பாதுகாப்பதே இந்த சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும்.
வாடிக்கையாளர்களைப் பாதுகாத்தல்
நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகாரசபை சட்டமூலம் அரசாங்க பொது நிதி குழுவால் பரிசீலிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. இந்தக் குழு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் கூடிய போதே இந்த திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன.
இலங்கை நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தும் அதிகார சபை நிறுவுவதற்கான ஏற்பாடுகளை உருவாக்குதல், கடன் வணிகம் மற்றும் நுண்நிதி கடன் வழங்கலை ஒழுங்குபடுத்துதல்,

கடன் வணிகம் மற்றும் நுண்நிதி கடன் வாடிக்கையாளர்களுக்குப் பாதுகாப்பை வழங்குதல் மற்றும் 2016 ஆம் ஆண்டு 6 ஆம் இலக்க நுண்நிதிச் சட்டத்தை இரத்துச் செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு நுண்நிதி மற்றும் கடன் ஒழுங்குப்படுத்தல் அதிகார சபை சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆதிமுத்து யார் என்ற பரபரப்பிற்கு இடையில் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலின் படப்பிடிப்பு தள வீடியோ... என்ன விஷயம் பாருங்க Cineulagam