இலங்கையர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய மற்றுமொரு பாரிய மோசடி - கட்டுநாயக்கவில் சிக்கிய மர்மம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சீன பிரஜைகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
உலகின் பல நாடுகளை இலக்கு வைத்து நீர்கொழும்பில் இடம்பெற்ற பாரிய இணைய நிதி மோசடி தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த மோசடி தொடர்பில் இலங்கையர்கள் 8 பேர் உட்பட 36 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கொழும்பு பிரதான நீதவான் திலின கமகேயிடம் தெரிவித்துள்ளனர்.
கிரிப்டோ பரிவர்த்தனை
இந்தநிலையில், சந்தேக நபர்களை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Web Lanka லோகோ அல்லது இதே போன்ற சின்னத்தைப் பயன்படுத்திய இந்த குழு, கிரிப்டோ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்காக கூறி பணத்தை வைப்பு செய்த மக்களை ஏமாற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 19 பாகிஸ்தானியர்கள், 2 இந்திய பிரஜைகள், 2 நேபாள பிரஜைகள், மலேசியா, இந்தோனேசியா, அல்ஜீரியா, மலேசியா. மற்றும் பங்களாதேஷ் நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இணைய நிதி மோசடி செய்பவர்களின் கிளைகள் டுபாய் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் செயற்பட்டு வருகின்றன.
குற்றப்புலனாய்வு திணைக்களம்
கைது செய்யப்பட்டவர்களில் பங்களாதேஷ் மற்றும் மலேசிய பிரஜை ஒருவரும் உள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த இணைய நிதி மோசடி செய்பவர்களின் கிளைகள் டுபாய் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளிலும் செயற்பட்டு வருகின்றன.
இந்த வலையமைப்புடன் தொடர்புபட்டவர்களை ஒவ்வொரு கிளைக்கும் மாற்றி, இலங்கையர்களை இணைய அடிமைகளாக பயன்படுத்தி, இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டுள்ளார்.