இந்தியாவில் உடன் நடைமுறைக்கு வந்த வரி அதிகரிப்பு! இலங்கை மக்களுக்கு மற்றுமொரு நெருக்கடி
இந்தியாவின் மத்திய அரசு, வெங்காய ஏற்றுமதிக்கு 40 சதவீத வரியை உயர்த்தியுள்ளது.
கடந்த சில வாரங்களாக இந்தியாவில் வெங்காயத்தின் விலை அதிகரித்து வருவதாகவும் எதிர்வரும் பண்டிகை காலத்தில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.

வரி அதிகரிப்பு
இதனால் வெங்காயத்தின் விலை உயர்வை கட்டுப்படுத்த ஏற்றுமதி வரியை உயர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு உடனடியாக நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வெங்காயம் மீதான இந்த ஏற்றுமதி வரி விதிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வெங்காயத்தின் விலை
மேலும் இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், மலேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுக்கு இந்தியா வெங்காயத்தை ஏற்றுமதி செய்கின்றது.

இதற்கமைய, இலங்கையில் இறக்குமதி வெங்காயத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியான சூழலில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கு நிச்சியம் விலை உயர்வு ஏற்படுவதுடன் இவ்வாறான விலை அதிகரிப்புகள் மக்களுக்கு மேலும் சுமையாகவே மாறும்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam