பாரவூர்தி சில்லில் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்த ஒரு வயது பெண் குழந்தை
Sri Lanka Police
Sri Lanka
Death
By Rukshy
ஹசலக்க பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டபகொல்ல பிரதேசத்தில் பாரவூர்தியின் பின் சக்கரத்தில் நசுங்கி ஒரு வயது பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இந்த விபத்து நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பாரவூர்தியின் சாரதி கைது
தாயும் தந்தையும் குழந்தையுடன் உறவினர் வீட்டுக்குச் சென்ற வேளையில், அங்கிருந்த பாரவூர்தி ஒன்று அவ்வழியாகப் புறப்பட்டுச் செல்ல முற்பட்ட வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த குழந்தை மகியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளது.
விபத்தை ஏற்படுத்திய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புதிய ஆண்டைத் திட்டமிடுவது..! 1 நாள் முன்
நான் தாக்கப்பட்டேன், கீழே விழுகிறேன்! ரஷ்ய ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்திய உக்ரைனின் ட்ரோன் படகு News Lankasri
எப்போ அந்த தீர்ப்பு வந்துச்சோ அப்பவே அவர் சாப்பிடாம ஆயிட்டாரு.., VJ சித்ராவின் தாயார் கண்ணீர் மல்க பேட்டி News Lankasri
1111 நாட்கள் கொண்ட SBI Green Deposit FD திட்டம்.., ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
16ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US