யாழில் பரிதாபமாக உயரிழந்த ஒரு வயதுக் குழந்தை
யாழில் (Jaffna) காய்ச்சல் காரணமாக ஒரு வயதுக் குழந்தை ஒன்று பரிதாபமாக உயரிழந்துள்ளது.
தம்பாட்டி, ஊர்காவற்துறை பகுதியைச் சேர்ந்த பிரேமநாத் நிகாரிகா (வயது 1) என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த குழந்தைக்கு பிற்பகல் ஒரு மணியளவில் காய்ச்சல் ஏற்பட்டது.
உடற்கூற்று பரிசோதனை
இந்நிலையில் 21ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் குறித்த குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது.
இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை 21ஆம் திகதி இரவு 11 மணியளவில் உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன், காய்ச்சல் காரணமாக மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.





இஸ்ரேலுக்கு உதவியதால் அமெரிக்காவின் சேதமடைந்த ஏவுகணை அமைப்புக்கான செலவு ரூ 17,000 கோடி News Lankasri

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
