“ஒரே நாடு ஒரே சட்டம்” செயலணிக்கு பிரதமர் இணக்கம் இல்லை: ரவூப் ஹக்கீம்
“ஒரே நாடு ஒரே சட்டம்“ செயலணி தொடர்பில், பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் வெளியிடவில்லை என்பதை அறிந்து கொள்ள முடிகிறதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
இன்று காலை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க இது தொடா்பில் எழுப்பிய கேள்விக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ச, பதிலளிப்பதில் காட்டிய விருப்பமின்மை இதனை உறுதிப்படுத்துகிறது.
இதற்கு முன்னரும் கோவிட்டினால் இறக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருந்த போது, அதற்காக பல்வேறு திட்டங்களை பிரதமர் முன்வைத்திருந்தார்.
இது பிரதமரின் கருத்துக்களுக்கு ஜனாதிபதி இடம் தருவதில்லை என்பதையே காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan
ஈரானுக்கு எதிராக அதிநவீன லேசர் தொழில்நுட்பம்: மாற்று திட்டத்தை கையில் எடுத்த அமெரிக்கா News Lankasri