இரு பெண்களுக்கிடையிலான மோதலில் கத்திக்குத்திற்கு இலக்காகி ஒருவர் மரணம்
தனிப்பட்ட மோதலொன்றை தடுக்க சென்ற 37 வயதான நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் குருநாகல் மாவட்டம், மெதிரிகிரிய – பெரகும்புர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது எனப் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தனது வாகனப் பழுதுபார்ப்பு நிலையத்தில் பணி நிறைவடைந்து வீடு செல்லும் போது, இரு பெண்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த மோதலைத் தடுப்பதற்காகக் குறித்த நபர் முயற்சித்துள்ளார்.
அதன் போதே அவர் மீது பெண்ணொருவரால் கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும், அதன் பின்னர் அங்கிருந்த மற்றொரு பெண்ணால் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்துள்ளார் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, உயிரிழந்த நபரின் மனைவி, கடந்த 7 நாட்களுக்கு முன்னரே குழந்தையொன்றைப் பிரசவித்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தினார் எனக் கூறப்படும் பெண் கைது செய்யப்பட்டுள்ளளார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam
