தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் 57/2 மைல் கல்லிற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெற்று பியர் போத்தல்களுடன் நேற்று காலை மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த கனரக வாகனமே விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதியே உறங்கியதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த வாகன உதவியாளரின் சடலம் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கனரக வாகனம் கொழும்பு பிரதேசத்தில் உள்ள நிறுவனமொன்றுக்குச் சொந்தமானது எனவும்
சாரதி மற்றும் உதவியாளர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார்
கூறியுள்ளனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பாண்டியன் குடும்பம் மீது பொய் புகார் அளித்த மயில் அம்மாவுக்கு நேர்ந்த கதி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் போட்டோ Cineulagam